நேற்று கொழும்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கூடலில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் 13 பிளஸ் தீர்வைக் கோரிய கடிதத்தில் கையொப்பமிட மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
கூட்டத்தின்போது 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தேவை என சிலர் பரிந்துரைத்துள்ளதுடன், சிலர் கூட்டாட்சி முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அது தொடர்பில் கட்சியின் ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பதில் அளிப்பதாக சம்பந்தர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்கேற்றிருந்தன.
இந்திய அரசாங்கம் தொடர்புப்பட்டுள்ள 13வது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பு அமைந்திருந்தமையால், இலங்கை அரசியலில் முக்கிய சந்திப்பாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் இரா சம்பந்தர் 13 பிளஸ் தீர்வைக் கோரிய கடிதத்தில் கையொப்பமிட மறுத்த சம்பவம் செல்வம் அடைக்கலநாதனுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.