இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் (Jaipur) நகரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள கோபுரத்தின் மேலே ஏறி செல்பி எடுக்க முற்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கோபுரத்தின் மீது 27 பேர் இருந்ததாகவும் அவர்களில் பலர் கீழே பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,