தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 காலை 7 மணிக்கும் ஆரம்பித்து வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
பிரபலங்களும் சினிமா நடிகர் நடிகைகளும் ஓட்டுக்களை அவர்களின் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
அதில் நடிகர் அஜித்தும் அவரது மனைவி நடிகை ஷாலினியும் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு 20 நிமிடத்திற்கு முன்பாகவே சென்று ஓட்டுப்போட்டுள்ளனர்.
நடிகர் அஜித் எப்போது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் நல்ல குணம்படைத்தவர் என்று கூறப்பட்ட நிலையில். ஓட்டுப்போட போன இடத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுக்க முற்பட்டனர்.
இதனால் கோபமடைந்த நடிகர் அஜித் ரசிகர் ஒருவரின் மொபைலை பிடிங்கி கைநீட்டி செல் என்று கூறியுள்ளது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த ரசிகரை கூப்பிட்டு இதுபோல் செய்யக்கூடாது என்று கூறி மொபைலை கொடுத்துள்ளார் தல அஜித். தற்போது அஜித்தின் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.