சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்-ரோஹினி பணத்தை ஏமாற்றிய விஷயம் இப்போது முத்துவால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
விஷயம் தெரிந்த விஜயா, மனோஜை விட்டுவிட்டு ரோஹினியை மட்டுமே அடிக்கிறார். மனோஜை ஏமாற்றி ரோஹினி தான் இப்படியொரு வேலை செய்துள்ளார் என விஜயா அடிக்கிறார்.
கடும் கோபத்தில் இருக்கும் விஜயா, ரோஹினியை மீண்டும் மீண்டும் அடிக்க செல்ல அண்ணாமலை தான் தடுக்கிறார்.
நாளைய எபிசோடில் வந்த புரொமோவில், மனோஜ் தனது ரூமிற்கு ரோஹினியிடம் என்னை ஏன் நான் எதற்கும் உதவாதவன் என்பது போல் பேசினாய், எனக்கு கஷ்டமாக இருந்தது என கூறுகிறார்.
இதைக்கேட்ட ரோஹினி, என்னை உன் அம்மா அடிக்கிறார் எதையும் கேட்கவில்லை, நான் உன்னை சொன்னது இப்போது தவறாக தெரிகிறதா என கோபமாக கேட்கிறார்.
அதோடு பேகை மாட்டிக்கொண்டு வெளியே செல்ல கிளம்ப, மனோஜ் எங்க போற என கேட்க, எனக்கென்று யாரும் இல்லாத இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும் என கிளம்புகிறார்