விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றுள்ளது.
மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.
இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.