எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாற்றப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பதாகவும், மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பிற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கான பரந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.