இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 12 சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று (21) இரவு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 01 கிராம் 625 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்களும், 01 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும், மூன்று கிராம் 600 கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிராம் 25 கிராம் க்ரூஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும் மற்றும் ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹேஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமஹாராம மற்றும் கோனபினுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.