தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. எனினும், இந்த நிகழ்வுகளை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை பகிஷ்கரிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.