சுக்கிர பகவான் ஜூன் 12ஆம் திகதி ரிஷப ராசி இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளதால் லட்சுமி நாராயண யோகம் உள்ளிட்ட யோகங்களால் நான்கு ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்க போகின்றது என்பதை பார்ப்போம்.
சுக்கிரன் வலுவாக இருக்கும் ஜாதகம் உடையவர்கள், கவர்ச்சியானவர்களாகவும் பிறரை ஈர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்று வாழும் அதிர்ஷ்டத்தையும் சுக்கிரன் தான் தருவார்.
ரிஷபம்
சுக்கிரன் பெயர்ச்சியாவதால் ரிஷப ராசியினருக்கு லாபம் கிடைக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுபவர்களில் முதலிடத்தை பிடிக்கும் ரிஷப ராசியினரின் வாழ்க்கையில், செல்வம் பன்மடங்கு அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வருமானங்கள் வந்து சேரும்.
சிம்மம்
சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபபலன்களைத் தரும். சிம்ம ராசியினருக்கு தொழில் முன்னேற்றமும், சமூகத்தில் அந்தஸ்துக்கும் சுக்கிரன் வழி செய்வார். பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என வாழ்க்கையில் அந்தஸ்து உயரும். நிம்மதியான வாழ்க்கை வாய்க்கும்
துலாம்
சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, துலாம் ராசிக்காரர்களுக்கு அருமையான வாழ்க்கை அமையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் என்றால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இரட்டிப்பாகும்.. சுக்கிரனின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் வாழ்வில் சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். உறவுகளில் நெருக்கம், வாழ்க்கையில் வெற்றி பெறுலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். நிதி ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், புதிய உறுப்பினர் வரவும் மனதில் அமைதியை ஏற்படுத்தும்.