பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளியை போன்று காட்சி தரும் பழம்தான் ட்ராகன் பழம் . முன்பெல்லாம் இது கிடைப்பது அரிதாக இருந்தது .
ஆனால் இப்போது பெரும்பாலான பழ கடைகளில் கிடைக்கிறது .
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரப்படும் பழமாக இருக்கிறது.
தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர் .
ட்ராகன் பழம் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் .
டிராகன் பழத்தின் நன்மைகள்
நீரிழிவு எதிர்ப்பு
ஆய்வுகளின்படி, இந்த பழம் நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
அதுமட்டுமின்றி இப்பழத்தை சாப்பிடுவதால் உடல் பருமனும் கட்டுக்குள் இருக்கும்.
புற்று நோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த பழத்தை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பற்களுக்கு நன்மை
இதில் கால்சியம் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை செய்யும். நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது.
டிராகன் பழம் நார்ச்சத்து நிறைந்த பழம். மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும்.
அதோடு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் டிராகன் பழம் நன்மை அளிக்கிறது.