தமிழகத்தில் பிரச்சாரம் நேற்றோடு நிறைவு பெற்ற நிலையில், கமல், சீமான், தினகரன் போன்றோர் தங்கள் சொந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
நாளை தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் கடந்த சில தினங்களாகவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த தேர்தலின் கருத்துக்கணிப்பில் பெரும்பாலும், திமுகவே வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக பல ஊடங்களில் வெளியாகியுள்ளது. இதனால் திமுக உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.
இருப்பினும் கருத்துக்கணிப்பு ஒரு சில தேர்தல்களில் அப்படியே நடந்ததில்லை என்பதற்கான சான்றுகளும் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் முடிவுலே எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும்.
இந்நிலையில், நேற்றிரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதற்காக நட்சத்திர வேட்பாளர்களான சீமான் திருவொற்றியூரிலும், கமல் கோயமுத்தூரிலும், தினகரன் கோவில்பட்டியிலும், முதல்வர் பழனிச்சாமி எடப்பாடியிலும், ஸ்டாலின் கொளத்தூரிலும், என தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.