சீனா, பிரித்தானியாவுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், சீனாவுடனான நெருக்கமான வணிக உறவுகள் தேசிய நலனுக்கு சாதகமாக உள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுடனான தமது அரசாங்கத்தின் அணுகுமுறையை விளக்குவதற்காக, வணிகத் தலைவர்களுக்கு ஆற்றிய உரையிலேயே பிரதமர் ஸ்டார்மர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, தம்மைப் பாதுகாத்துக் கொண்டு பிறிதொரு நாட்டுடன் வர்த்தகம் செய்யலாம் என்ற தெளிவான உண்மையை அங்கீகரிக்க, தீவிர அணுகுமுறைக்கான நேரம் இது” என்று பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கருத்தாய்வுகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் உறவு வரையறுக்கப்படுகிறது என்ற கருத்தை பிரதமர் நிராகரித்துள்ளார்.
தனது அரசாங்கம் அதிக பொருளாதாரத்திறக்கா பாதுகாப்பை அடமானம் வைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பே தமது முதல் கடமையாகும்.
தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் ஏனைய துறைகளில் ஒத்துழைக்க முடிகின்றது.
இந்நிலையில், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஆபத்து இல்லாத பகுதிகளில், சீனாவுடனான தங்கள் வணிக உறவுகளை மேம்படுத்த வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீனா பிரித்தானியாவை உளவு பார்ப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியான அரச நிறுவனங்களில் அதிகாரிகளை குறித்து இணைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரித்தானியாவில் சீனா இணைய ஊடுறுவலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை லண்டனில் உள்ள சீனத் தூதரகம், சீனாவின் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் ஸ்டார்மர் ” முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என விமர்சித்துள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு அரச பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு விஜயம் செய்த கடைசி பிரதமர் தெரசா மே ஆவார். அவர் 2018ஆம் ஆண்டு சீனாவிற்கு பயணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

