கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதான் திருடப்படுகின்றன.
கடந்த வாரம், திருட்டு, திருடப்பட்ட பொருட்களைக் கையாளுதல் மற்றும் திருட்டு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள், ஒரு பல்கேரிய நாட்டவர் உட்படவரும் அதில் அடங்குவர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் லண்டனில் திருடப்பட்ட தொலைபேசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
2020 இல் இது 28,609 ஆக இருந்தது, 2024 இல் 80,588 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் திருடப்பட்ட அனைத்து மொலைபல்களில் நான்கில் மூன்று சதவீதம் லண்டனில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.