ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, சிறைச்சாலைக்குள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலிப் வெதஆராச்சி இன்றுகாலை ரஞ்ஜன் எம்.பி சிறை வைக்கப்பட்டுள்ள அங்குனகொல பெலஸ்ஸ சிறைக்கு அவரை சந்திக்கச் சென்றபோது உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன் சிறப்புரிமையை சிறைச்சாலை ஆணையாளர் மீறியிருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் ரஞ்ஜன் ராமநாயக்கவின் முழங்காலில் இரண்டு சத்திரசிகிச்சை செய்திருப்பதால் மலசலகூடம் செல்ல கதிரை வடிவிலான ஆசனமே தேவைப்படுவதாகவும், எனினும் சிறை அதிகாரிகள் அதனை வழங்க மறுத்திருப்தாகவும் அவர் குறிப்பிட்டார்.