மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி அ.றுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலி, துவிச்சக்கரவண்டியில் வந்த சந்தேகநபரால் அ.றுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மு.றையிடப்பட்ட நிலையில் அது தொடர்பில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வி.சாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.