சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் குறைந்து போகும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வுகூறியுள்ளார்;
எனவே இலங்கைக்கு இன்று ஆட்சி மாற்றமல்ல, பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் உட்பட்ட அமைப்புக்களின் மாற்றமே இன்று தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்
நேர்காணல் ஒன்றின்போது கருத்துரைத்த அவர், புத்தாண்டுக்குப் பின்னர் டொலர் கையிருப்பு மேலும் வரண்ட நிலைக்கு செல்லும் என்று எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரும்போதே இந்திய கடன் வரிகள் மற்றும் பிற உதவிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை இயக்க முடியும்.
எனினும் ஆகஸ்ட் வரை பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பணவீக்கம் என்பது காய்ச்சலைப் போன்றது, அது குறைவதற்கு முன் அதிகபட்சமாக அதிகரிக்கும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம்
எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டமே தற்போது தேவை.
குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை தாம் தயாரித்து வருவதாக விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட மக்கள் புதிய ஆரம்பத்தையும் அமைப்புகளின் முழுமையான மாற்றத்தையும் விரும்புகிறார்கள்.
தற்போது நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காதுபோனால், தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள் புரட்சியாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்;