சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புகைப்படத்தின் வாயிலாக கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ் அவர்கள் கூறியதாவது, சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்தால் வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகள் குட்டி சிங்கப்பூராகிவிடும் என பலரும் கதைவிடுகின்றன.
இந்த நிலையில் நீண்டகாலமாக சிங்களக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள வேலணை மற்றும் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அம்பலவி பகுதியின் மயானத்தின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி சிங்களக் காட்சிகளுக்கு வாக்களித்தால் என்ன நிலைமை நிலவும் என்பதை புகைப்படம் வாயிலாக கூறியுள்ளார்.