ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் உண்மையில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் சிறுப்பிள்ளை போல் நடந்துக்கொள்வதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உண்மையில், ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் தற்போது பச்சிளம் பிள்ளைகளை போல் நடந்துக்கொள்கின்றனர்.
அப்பாவி மக்கள் இரத்த வெள்ளத்தில் செத்து விழும் போது கண்ணை திறந்து பார்க்காத முதுகெலும்பு இல்லாத தலைவர்கள், மீண்டும் சிங்கத்தின் தோலை போர்த்திக்கொண்டு நாட்டுக்குள் அரசியல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் அப்படியான முயற்சியை மேற்கொண்டால், மக்கள் சிறந்த முடிவை வழங்குவார்கள். அதற்கு நீண்டகாலம் செல்லாது, மிக குறுகிய காலத்தில் மக்கள் அதனை செய்வார்கள் எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.