பிரபல நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவர் வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.
நள்ளிரவில் வேளையில், சைஃப் அலிகான் மகன் அறையில் நுழைந்த திருடன், குழந்தையை பிடித்து வைத்து கொண்டு 1 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது மகனை காப்பாற்ற வந்த சைஃப் அலிகானை 6 தடவைகள் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடப் பகுதி உட்பட சுமாராக 6 இடங்களில் காயம் இருந்ததால் இதற்காக மருத்துவர்கள் அவருக்கு 5 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்தனர்.
அதிலும் குறிப்பாக அவரின் கழுத்து மற்றும் தோள் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த நடிகருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் 6 நாட்கள் மருத்துவமனையில் இருந்த சைஃப் அலிகான் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார். அவரை காண ரசிகர்கள் மருத்துவமனை மற்றும் அவரது வீட்டில் ரசிகர்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
மேலும், வீடு திரும்பினாலும், ஒரு வாரத்திற்கு முழுமையாக ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவ தினத்தில் சைஃப் அலிகானைத் தாக்கிய நபர், வங்கதேசத்தைச் சேர்ந்த பஹிர் என்பவர் என்றும் போலீஸார் 70 மணி நேர விசாரணைக்கு பின்னரே கைது செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
அத்துடன், அவரை காவல்துறையினர் இன்று சைஃப் அலிகான் வீட்டிற்கு அழைத்துச்சென்று, எப்படி வீட்டிற்குள் நுழைந்தான் என்பது குறித்து நடித்துக்காட்ட வைத்து பதிவு செய்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.