வயல் வெளிகளில் முளைக்கும் ஒரு பசளைக் கீரைவகையைச் சார்ந்ததுதான் மூக்கிரட்டை எனப்படும் சாறனைக் கீரை.
கீரைக்கறி போல் மசித்து சமைக்கப்படும் இந்த கீரை தனியே சுவையானது மட்டுமன்றி அளப்பரிய மருத்துவ குணமும்கொண்ட ஒரு கீரை வகையாகும்.
மனிதர்களின் சிறு நீரகத்தை காக்கும் முக்கிய பங்கு இந்த கீரைக்கு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதை உண்டு சாவின் விளிம்பிலிருந்து மீணடவர் பற்றிய பதிவை இங்கு பார்ப்போம்,
நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்.
கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் தான் படித்த நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்.
“மூக்கிரட்டை இலைகளை” அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் சோற்றை பிழிந்து எடுத்து விட்டு மூக்கிரட்டை சாறு கலந்து” 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர், நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார்.
மூன்று நாளில் எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் 2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்.