கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கல்கிசை, தெளவல பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவர் கடந்த 16ஆம் திகதி கொள்ளையடிப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியை கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெலவல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர்.
மோட்டார் சைக்கிள் திருடுதல், பகலில் வீடுகளை உடைத்தல், சொத்துக்களை திருடுதல் போன்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.