சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் காரணங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பது பசி ஹார்மோன்களை பாடாய்படுத்தும். இதனால் சாப்பிட வேண்டும் என தோன்றும், சாப்பிட்ட பின்னரும் பசியெடுக்கும். இதற்கு என்ன காரணம் என்றால் மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்ட்டிசோல் என்ற பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்கும். இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றும்.
சரியான தூக்கமில்லை என்றாலும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். சரியாக தூங்காவிட்டால் Ghrelin என்ற பசியை தூண்டும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதேபோல் போல் பசியை அடக்கும் Leptin ஹார்மோன் குறைவாகவே சுரக்கும். சமச்சீரற்ற இந்த ஹார்மோன் பசியை அதிகரிக்கச் செய்யும்.
நீர்ச்சத்து குறைவுக்கூட பசியை எதிகரிக்கச் செய்யும். உங்கள் உடலுக்கு போதுமான நீர் நிலை என்றால் தாகத்திற்கும், பசிக்கும் வித்தியாசம் தெரியாது. இது தேவையற்ற உணவுகளை உண்ண வழிவகை செய்யும். செரிமானத்தை மெதுவாக்கி விரைவாக பசியையும் தூண்டும்.
வேகமாகச் சாப்பிடுவதும் இந்த பிரச்னைக்கு வழிவகுக்கும். காரணம் நீங்கள் வேகமாக சாப்பிடுவதால் எதை சாப்பிடுகிறீர்கள் என்பது மூளையில் பதியாது. இதனால் வயிறு நிறைவு ஏற்படாது. எனவே, நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள். வேகமாக சாப்பிடுவது செரிமானத்தையும் கெடுக்கும். இதனாலும் அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றலாம்.
இந்த உணவுகளும் அதிக பசியை தூண்டும். அதிகமாக சோடியத்தை எடுத்துக்கொள்வது உடலின் இயற்கையான தாகம் எடுக்கும் உணர்வை மட்டுப்படுத்தும். இதனால் நீர்ச்சத்து குறைந்து, பசி அதிகரிக்கும். இந்த உணவுகளில் ஊட்டச்சத்துக்களும் இருக்காது. இதனால், வயிறு நிறைவும் ஏற்படாது, அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றும்