சாந்தன் மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் காலமானார் என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அறிவித்துள்ளது.
தன் மகனின் வருகைக்காக இறை நம்பிக்கையோடும், மனநம்பிக்கையோடும் காத்திருந்த அவரது தாயாருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.
சாந்தனின் தாயார், சகோதரர், சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, சாந்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.