நீர்கொழும்பில் ராஜபக்சர்கள் சவப்பெட்டியில் ஊர்வலம் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருகடி நிலையை அடுத்து , அதற்கு காரணமான ஜனாதிபதி கோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் காலி முகத்திடலில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கூடாங்கள் அமைத்து பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள்- தமிழ் புத்தாண்டுகளுக்குகூட வீடுகளுக்கு செல்லாது போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் சவப்பெடிகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்ட நிலையில், அந்த பெட்டிகளின் மேல் ராஜபக்சர்கள் புகைப்படங்களை ஒட்டி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
அதேசமயம் தான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என அறிவித்த ஜனாதிபதி கோட்டபாய இன்று புதிய அமைச்சரவையை நியமித்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.