யாழ் மேயர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு யாழ். நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் முற்படுத்தப்பட்டார். குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உட்பட 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.