கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி சற்றுமுன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மாளிகாவத்த பகுதியிலிருந்து காலிமுகத்திடல் பகுதிக்கு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை வழிமறித்த பொலிஸார் பேரணியை முன்னெடுக்க தடை விதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் பதிவாகியுள்ளதுடன் குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கொழும்பில் பல பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.