காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக த்கவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.
இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.