பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அவர்களின் சில கோளாறுகள் காரணமாக பெரிதாக உணவுகளை சாப்பிடமாட்டார்கள்.
மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல்வேறு இயற்கை முறைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
அந்த வகையில் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் வெண்டைக்காயை சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அவர்களுக்குள் இருக்கும்.
வெண்டைக்காய் என்பது ஒரு தனித்துவமான, நீளமான வடிவம் கொண்ட காய் வகையாகும். இதனை சமைக்கும் பொழுது ஒரு வலுவலுப்பான தன்மை காணப்படும்.
இதன்படி, வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் என தெரிந்து கொள்வோம்.
1. அதிகப்படியான நார்ச்சத்துக்கள் வெண்டைக்காயில் இருக்கின்றது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிறு கோளாறு பிரச்சினையுள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடுவது சிறந்தது.
2. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடலாம். ஏனெனின் இதில் கரைய கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.
3. வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் உணர்திறன் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
4. வெண்டைக்காயிலுள்ள வைட்டமின்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுபடுத்துக்கின்றன.
5. வளரும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் அதிகம் கொடுக்க வேண்டும். இந்த காயில் இருக்கும் வைட்டமின்கள் ஞாபகச்சக்தியை அதிகரிக்கின்றது.