பொதுவாகவே வயதாகிக்கொண்டு இருந்தால் உடம்பில் பல பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் வயது வேறுப்பாடின்றி வரும் ஒரே நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான்.
நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
இன்சுலினை உற்பத்தி செய்யாத போது டைப் 2 நீரிழிவு நோய் உருவாகிறது. இது பெரும்பாலும் உடல் பருமன், மோசமான உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணத்தினால் ஏற்படும்.
சில உணவுகள் டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே தப்பி தவறியும் கூட இந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
அவை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- சோடாக்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற சர்க்கரை பானங்களை உட்க்கொள்ளாமல் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் மற்றும் சர்க்கரை இல்லாத பானத்தை எடுத்துக்கொள்ளலாம்.
- மைதா உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதற்கு பதிலாக பழுப்பு அரிசி, கினோவா அல்லது முழு தானிய ரொட்டி போன்ற முழு தானிய உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
- இறைச்சி வகைகளில் அதிக அளவு சோடியம் மற்றும் பிரிசர்வேடிவ்கள் இருக்கும் ஆகவே சிக்கன், மீன் அல்லது பருப்பு வகைகள் போன்ற லீன் புரத மூலங்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
- Airfryer இல் தயார் செய்யப்பட்ட உணவுகள் அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக்கொள்ளவது சிறந்தது அல்ல.
- காலையில் எடுத்துக்கொள்ளும் தானியங்களில் சர்க்கரையை சேர்ப்பது வழக்கம். ஆகவே ர்க்கரைகள் சேர்க்கப்படாத முழு தானிய தானியங்களை சாப்பிடவும். இல்லையேல் புதிய பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சாப்பிடலாம். இவை சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
- வறுத்த கோழி அல்லது வறுத்த தின்பண்டங்கள் போன்ற வறுத்த உணவுகள் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகவே வேகவைத்த அல்லது ஏர்ப்ரையரில் வறுக்கப்பட்ட உணவை சாப்பிடவும்.
- கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் அல்லது பாலாடைக்கட்டி மற்றும் கொழுப்பில்லாத பாலை தேர்ந்தெடுத்து குடிக்கவும். இதை தவிர முழு கொழுப்புள்ள பாலை குடித்தால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
- பெரும்பாலான திண்பண்டங்கள் கொழுப்பில் தயார் செய்யப்படுகின்றது. ஆகவே அதை தவிர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- கேக்குகள், குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரிகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் அதிகமாக இருகின்றது. ஆகவே இதை தவிர்த்து பேரீச்சம்பழம், மேப்பிள் சிரப் அல்லது பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகளை சாப்பிடவும்.

