தற்போது சரிகமபவில் 35 வருட பழைய பாடல்களை போட்டியாளர்கள் பாடி நடுவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இதில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். பல துறை சரிகமப நிகழ்ச்சியை நாம் பார்த்ததுண்டு ஆனால் தற்போத இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் திறமை வாய்ந்தது.
ஒருவருக்கு ஒருவர் சலிக்காதவர்களாக இருக்கிறார்கள். போட்டியை விட்டு விலகிச்செல்பவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது.
இந்த நிலையில் பல சுற்றுக்களை தாண்டி தற்போ பாடகர் தேவாவின் பாடல் சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர் யோகஸ்ரீ தன்னந்தனியாக என்ற பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரின் இந்த பாடலைக்கேட்டு தேவா பல பாராட்டுக்களை குவிக்கிறார். இது இன்று பிரபல டி நிகழ்ச்சியாக ஒலிபரப்பபட இருக்கின்றது.