திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ மாணவிகள்
தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் , சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை சாதாரணமாக உள்ளதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் மாணவர்களின் திடீர் சுகயினத்திற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.