சினிமா பிரபலங்களில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடிகளில் சமந்தா-நாக சைத்தன்யா முக்கியமானவர்கள். தெலுங்கு சினிமாவில் இணைந்து படங்கள் நடித்த இவர்களுக்குள் காதல் ஏற்பட 2017ம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சமந்தா-நாக சைத்தன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2021ம் ஆண்டு சோசியல் மீடியாவில் தாங்கள் பிரிந்துவிட்டதாக அறிவித்தார்கள்.
நாக சைத்தன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற படத்தில் நடித்துள்ளார், படம் வரும் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாக சைத்தன்யாவிடம் ஒரு பேட்டியில், சமந்தா நாங்கள் விவாகரத்து செய்து கொண்டாலும் இருவரும் நட்பாக இருக்கிறோம் என்று கூறினார், உங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு நாக சைத்தன்யா, பிரிவோம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இது என்னை மிகவும் எரிச்சல் அடையை செய்கிறது. எனக்கு அப்படிப்பட்ட நட்பு தேவை இல்லை எனக்கு கூறியிருக்கிறார்.