தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் தான் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து பெண் அமைச்சர், கொண்டா சுரேகா சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியிருந்ததார்.
இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகர்ஜுனா கடுமையாக திட்டி ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.
அதேபோல் நடிகை சமந்தா, இதுகுறித்து பேசியவரை கடுமையாக தாக்கி இன்ஸ்டா பதிவில் அறிக்கை வெளியிட்டார். தற்போது டோலிவுட்டை சார்ந்த பல பிரபலங்கள் சமந்தாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
அதில் நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில் மிகவும் காட்டமாக அரசியல்வாதியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
மேலும் நடிகர் ஜூனியர் என் டி ஆர் அந்த அரசியல்வாதியின் பெயரை குறிப்பிட்டு கடுமையாக கண்டித்து கருத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் இது வெட்கக்கேடானது என்று பதிவிட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமந்தா விவாகரத்து குறித்து பெண் அமைச்சரின் கருத்துக்கு தெலுங்கு திரையுலகமே கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றது. ஆனால் தமிழ் திரையுலகினர் கப்சிப் மோடில் இருக்கின்றார்களே என்று ரசிகர்களும் பொங்கி எழுந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.