கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கொடையில் உள்ள தொற்று நோய் நிறுவனத்தில் (IDH வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற வட்டார தகவல்களை மேற்கொள்காட்டி இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சபாநாயகரின் ஊழியர்களில் 3 பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்கதக்து.

