அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது உட்பட எட்டு முன்மொழிவுகள் உடன் கூடிய அரசியல் திருத்தச் சட்டமூலமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாராளுமன்றமே ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையானது நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக பொறுப்புக்கூறும் விதமாக செயற்படவேண்டும் என்றும் , அமைச்சரவை பொறுப்புக்கூறல் இல் தவறினால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக அமைச்சரவையில் அமைச்சர்களை நீக்கமுடியும், அமைச்சரவை அமைச்சர்களின் அதிகபட்ச எண்ணிக்கையானது 25 ஆக இருக்க வேண்டும்.
அத்துடன் அமைச்சரவை அல்லாத மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையும் 25 ஆகவே அமைய வேண்டும், தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக் கூடாது, ஊழல் மோசடிகளை தடுக்கும் கடுமையான சரத்துக்களை உள் வாங்கவும் வேண்டும் .
மேலும் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை படுத்துவதுடன், கணக்காய்வு மற்றும் நிதி ஆணைக்குழு என்பவற்றையும் நிறுவுதல் அவசியமாகவும் தேசிய பாதுகாப்புச் சபையை அரசியல் அமைப்பு அங்கீகாரத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.