ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் செய்திருக்கக் கூடிய சனிபகவான், கும்ப ராசியிலேயே பின்னோக்கி நகரக்கூடிய சனி பகவான் நவம்பர் 15ம் திகதிக்குப்பின் நேர்முக பயணத்தை மேற்கொள்கின்றார்.
இந்த சனி வக்கிர பெயர்ச்சி காலத்தில் எந்த ராசிக்கு என்னென்ன பலன் கிடைக்க போகின்றது என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
சனி பகவான் வக்கிர நிலையானது மேஷ ராசியினருக்கு நிதி ரீதியாக சில பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சாதகமற்ற காலமாக அமையும். இந்த காலத்தில் உங்களின் நிதி நிலையை அறிந்து செலவு செய்வது அவசியம். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
கடக ராசி
கடக ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கக் கூடிய காலத்தில், தற்போது சனியின் பிற்போக்கு நிலையானது உங்களுக்கு பொருளாதார ரீதியாக சுமையை ஏற்படுத்தும். அதிகமாக பயணம் செய்ய நேரிடும். அதனால் அலைச்சலும், உடல்நல பிரச்சினைகளும் சந்திக்க நேரிடும். அவசியம் இல்லாத விஷயங்களுக்கு பயணத்தை தவிர்ப்பது நல்லது. சிலர் நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு சனியின் வக்கிர நிலையானது, எதிர்மறையான பலன்களை தரும். உங்களின் குடும்ப பொறுப்புக்கள் மற்றும் வேலை தொடர்பாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். நிதி பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் வருமாக செயல்படுவீர்கள். உங்கள் வேலை நிலைத்தன்மையற்றதாக இருப்பதால் மனவருத்தம் ஏற்படும். உங்கள் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
கன்னி ராசி
கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு சனியின் பிற்போக்கு நிலையானது சாதகமற்ற சூழல் ஏற்படுத்தும். உங்களுக்கு உடல், மனம் நிதி நிலை ரீதியாக பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் சிலர் சட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களின் பொருளாதார நிலை மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிச்சுமை அதிகரிக்கும். கடின உழைப்பு தேவைப்படும்.
மீன ராசி
ஏழரை சனி நடக்கக்கூடிய மீன ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனியின் வக்கிர நிலையானது சாதகமற்ற சூழல் இருக்கும். உங்களின் பணியிடத்தில் வேலை பல அதிகரிக்கும். உங்களின் நிதிநிலை குறையும். அதனால் செலவுகள் பூதாகரமாகத் தோன்றும். தனது விஷயத்தில் கவனமாக செயல்படவும்.