கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.
இந்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திஜரத்தின் பிரகாரம் சனிபகவானுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சனி கிரகத்தால் ஏற்படும் தாக்கம் நீடித்த தாக்கத்தை உருவாக்கக்கூடியது.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார்.தொடர்ந்து 250 நாட்களுக்கு சனி பகவான் கும்பத்தில் தான் இருப்பார்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதிவரை குறிப்பிட்ட சில ராசியினர் நிதி ரீதியில் உச்சத்தை தொடப்போகின்றனர்.அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலம் சனியின் சாதக பலன்களை அதிகமாக கொடுக்கும். சமூகத்தில் இவர்களின் அந்தஸ்து விரைவாக உயரப்போகின்றது.
நீண்ட நாள்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு சிறந்த முடிவு கிடைக்கும். தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படும். மொத்தத்தில் பணத்தை குவிக்கும் காலகட்டமாக அமையும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் பல்வேறு சாதக பலன்களை கொடுக்கப்போகின்றார். இந்த காலத்தில் காதல் விடயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.
திருமண வாழ்க்கையிலும் குடும்பத்தாருடனும் மகிழ்சியாக இருப்பீர்கள். நிதி நிலையில் உச்ச வளர்ச்சியை காண்பீர்கள்.
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வருகின்ற 250 நாட்களும் அமோகமாக இருக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் வெற்றியை அள்ளப்போகின்றது.
எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டதில் இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் காணப்படுகின்றது.