மஹிந்தவின் நெருங்கிய நண்பரும் இராஜாங்க அமைச்சருமானசனத் நிக்ஷாந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளமை குறித்து தென்னிலங்கை மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மொட்டு கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் , இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த (48) இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மரணமடைந்தார்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அமைச்சரின் ஜீப்பும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கோட்டபாய ராஜபக்க்ஷ ஆட்சியில் இருந்தபோது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ராஜபக்க்ஷ குடும்பத்தை ஆட்சியில் இருந்து விரட்டி அடித்திருதனர்.
அதன்போது மக்கள் மீது பாரியதாக்குதலும் படையினரால் நடத்தப்பட்டிருந்த நிலையில், மக்களின் மீதான தாக்குதலின் பின்னனியில் சந்த் நிக்ஷாந்தவே செயல்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சனத் நிக்ஷாந்த உயிரிழந்துள்ள நிலையில், அவர் செய்த கர்மா , தண்டித்து விட்டதாக தென்னிலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.