வட மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் சஜினேட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்ற இளைஞசர்கள் மத்தியில் தற்போது கல்விப் புத்தங்களை படிக்கின்றவர்களாவும், பேனாவை பிடித்து எழுதுகின்ற நிலைமைக்கு மாணவ இளைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறான நல்லெண்ணத்தினை வளர்ப்பதற்காக உருவாக்கியவர்கள் ஜனாதிபதியும், பிரதமரும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் பிரதான தேவையாக இருந்தது, குடிநீர் திட்டம். அது 52 சதவீதமாக கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இருந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளில் 60 சதவீதமாக காணப்பட்டது. எனவே, எமது அரசாங்கம் என்ற ரீதியாக எதிர்பார்க்கின்றோம்.100 சதவீதமான நன்நீர் குடிநீர் திட்டத்தினை குடிநீர் இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அது 06 வீதமாக உள்ளது.
யாழ். மாவட்ட குடிநீர் இல்லாதவர்களுக்கான நீர்வழங்கல் திட்டம் 04 வீதமாகவே காணப்படுகின்றது. எனவே 2025 ஆம் ஆண்டில் நிறைவான குடிநீரை வழங்க வேண்டும். என்பது பிரதமர் மற்றும் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி அமைச்சின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
மேலும் செல வுகுறைந்த நீர் விநியோகத் திட்டத்தில் இருந்து சில இடையூறுகள் இருந்தது. அதனை அமுல்படுத்தவிடாமல் கடைசியாகவும் செயற்படாமல் இருந்தது. அதனால் மக்களுக்கு வழங்கும் நீர் விநியோகம் இடையூர் காணப்பட்டது. எனவே, அதுவும் ஒருயூனிற்றுக்கு 54 ரூபாவாக நீரை பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணமாக இருந்தது. அது தற்போது எமது அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு 10 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் குடிநீர் இல்லாதவர்களுக்கான குடிநீரைப் 100 சதவீதமாக பெற்றுக் கொள்ளுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான நீர்வழங்கல் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்கான நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (06) யாழ். நயினாதீவில் உள்ள 07 வட்டராத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியபூர்வமாக திரை நீக்கத்தினை செய்து வைத்து திறந்து வைத்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவர் மாவட்ட பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

