ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
அத்துடன் இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டை அழித்துவிட்டது. ராஜபக்ச அரசாங்கம் நாட்டை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாங்கள் நாட்டை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.