எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, தனது மகள் மற்றும் மகனுடன் நாட்டைவிட்டு வெளியேறி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று காலை 06.05 மணிக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL505 இல் அவர்கள் இங்கிலாந்துக்குப் சென்றௌள்லதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் விமான நிலையத்தில் கூட்டத்தை தவிர்க்கவும், உடனடியாக விமானத்தில் ஏறவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன் ஊழியர் ஒருவர் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 20ம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) துலாஞ்சலி பிரேமதாசவிடம் வாக்குமூலம் பெற்றிருந்தது.
வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு கேட்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.