உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) கூடி கலந்துரையாடினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம்,எம்.ஏ.சுமந்திரன், ரிஷாத் பதியுதீன், பழனி திகம்பரம், கலாநிதி நாலக கொடஹேவா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அதற்காக செயற்பாட்டு ரீதியாக தலையிடவும் இங்கு கூடி முடிவு செய்தனர்.