தென்னாப்பிரிக்காவில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் சக உறுப்பினர்களுடன் ஜூம் கூட்டத்தில் இருந்தபோது, அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக வந்துள்ள சம்பவம் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது ஜூம் மீட்டிங் என்பது உலகம் முழுவது பிரபலமானது. அதன்மூலம் இணையத்திலேயே அனைத்து கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைகள் மற்றும் வகுப்புகள் நடத்துவது என்பது மக்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால், ஜூம் அழைப்பில் நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தற்போது அடிக்கடி அதிர்ச்சியையும் பரபரப்பையம் ஏற்படுத்திவருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார் Xolile Ndevu. அவர், மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் COVID-19 இறப்புகள் குறித்து தென்னாப்பிரிக்காவில் உள்ள 23 தலைவர்களுடன் zoom மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்குப் பின்னால் தோன்றியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் திடீரென சிரிக்க தொடங்கியுள்ளார்
அந்த நேரத்தில், குழுத் தலைவரான Faith Muthambi (பெண்) தலையிட்டு “தலைவரே, உங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் சரியாக ஆடை அணியவில்லை. எங்களுக்கு எல்லாம் தெரிகிறது” என்று கூறி கூட்டத்தை இடைநிறுத்த தூண்டினார்.
“தயவுசெய்து, தலைவரே, நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்கள் உங்களுடன் சந்திக்கும் போதெல்லாம், இதுபோன்ற படங்களை நாங்கள் காண்கிறோம். நீங்கள் நேரலையில் இருக்கிறீர்கள் கவனமாக இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
உடனே அவமானமாக உணர்ந்த Ndevu, முகத்தை கைகளால் மூடி “நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு பின்னால் நடப்பதை கவனிக்கவில்லை, நான் மிகவும் சங்கடப்படுகிறேன்”என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.