15 வயது பிளஸ்-1 மா ணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டிஎடையார் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அவ்வூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த குமாரின் மகன் தர்மா (21) என்ற கூலித்தொழிலாளி, அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது
இதனால் அம்மாணவி கர்ப்பம் அடைந்தார் இ தையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்
உடனே இதுபற்றி அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் அதன்பேரில் தர்மா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்