2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 44 பரீட்சை மையங்களில், 24,950 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சைக் கடமைகளில் 1,540 பணிக்குழாமினர் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சார்த்திகளை, உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
அதேவேளை வாகனங்களில் பயணிப்போர், பரீட்சைக்கு செல்வதற்காக வீதிகளில் காத்திருக்கும் மாணவர்களை, குறித்த பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க உதவுமாறும் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.