இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கும்பல் இவர்களை வழிமறித்துள்ளனர்.
பின்னர் வலுக்கட்டாயமாக இருவரையும் இழுத்துச் சென்ற அந்த கும்பல், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டுவிட்டு, 30 வயதான அந்த பெண்மணியை சீரழித்துள்ளனர்.சம்பவத்தை தொடர்ந்து அந்த தம்பதி சாதர் நகர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் தமது முன்னாள் கணவன் தினேஷின் நண்பர்கள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஐவர் கும்பல் வழிமறித்து மிரட்டி, சீரழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்மணியின் புகாரை பதிவு செய்த பின்னர் அவரை மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசார் தற்போது அந்த ஐவர் கும்பலை தேடி வருகின்றனர். குறித்த பெண்மணிக்கும் முன்னாள் கணவருக்கும் இடையே, இவரது இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.பெண்ணின் குடும்பத்தாரும் அந்த முன்னாள் கணவர் தொடர்பில் பொலிசாரை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.