தென்னிலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.அவரது நண்பி விஷ்மி விஹாங்காய என்பவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் விஷ்மியின் தாயார் திடீர் சத்திரசிகிச்சை ஒன்றுக்காக காலி நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் தந்தைக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.உடனடியாக விஷ்மியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்த யஷோதரா, தனது வீட்டிலேயே நண்பியை தனிமைப்படுத்தி அவருக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார.
5 நாட்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஷ்மிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரும் தனது வீட்டிலேயே நண்பியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.யஷோதரா செய்த உதவியை பாராட்டி பாடசாலையில் அவருக்கு பாராட்டு விழா ஒன்றும் ஏற்பாடு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.