தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் கடந்த கோலியை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக நெதர்லாந்து வீரர் வெஸ்லி பர்ரேசி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49வது சதத்தை கடந்து சாதனைப்படைத்துள்ளார்.
குறித்த சாதனையை படைத்த அவருக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ளது.
இந்நிலையில்,தனது கடைசி போட்டியில் இந்திய அணி 12ஆம் திகதி நெதர்லாந்தை சந்திக்கிறது.
நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வெஸ்லி பர்ரேசி சாதனை படைத்த விராட் கோலியை பாராட்டி ட்விட்டர் பதிவென்றை செய்துள்ளார்.
அவரது பதிவில், ”அடுத்த வாரம் இந்த மனிதருக்கு கைகுலுக்கி, உங்கள் பெயரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என கூற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.