முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிறேமச்சந்திர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிக்கா கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையை ஹிருணிகா பிரேமசந்திரவே உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.