கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷ அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் டலஸ் அணியுடன் அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அவசியமான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.